Images
  • Upper Thomson Accident
    (படம்: See Xinyi)

அப்பர் தாம்சன் ரோடு விபத்து - தலைகீழாகக் கவிழ்ந்தது கார்


(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

அப்பர் தாம்சன் ரோட்டில் இன்று மதியம் நடந்த சாலை விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களில் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து மதியம் இரண்டு மணி அளவில் நடந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உறுதிபடுத்தியுள்ளது.

விபத்தின் காரணமாக நியூட்டளை நோக்கிச் செல்லும் வழியில் அப்பர் தாம்சன் ரோட்டில் சின் மிங் அவென்யூ வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் சம்பவத்தை நேரில் கண்ட 21 வயது சீ ஸின்யி (See Xinyi) மோசமாகச் சேதமடைந்த மெர்சிடிஸ் (Mercedes), தலைகீழாகக் கவிழ்ந்துகிடந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) ஆகியவற்றைப் பார்த்ததாகச் சொன்னார்.

பொதுமக்களில் குறைந்தது 8 பேர் கவிழ்ந்த வாகனத்தை நிமிர்த்த உதவியதாகவும் சீ கூறினார்.

காயமடைந்தவர்களில் இரு பெண்களும் வயதான ஆடவர் ஒருவரும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

 

Top