Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தம்முடன் தங்கியிருந்த மாணவிகளை ஆபாசக் காணொளி எடுத்ததாக ஒப்புக்கொண்ட மாணவர்

Yale-NUS பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில், தம்முடன் தங்கியிருந்த சக மாணவிகளை ஆபாசக் காணொளி எடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார் 26 வயது மாணவர் ஒருவர்.

வாசிப்புநேரம் -
தம்முடன் தங்கியிருந்த மாணவிகளை ஆபாசக் காணொளி எடுத்ததாக ஒப்புக்கொண்ட மாணவர்

(படம்: Yale-NUS)

Yale-NUS பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில், தம்முடன் தங்கியிருந்த சக மாணவிகளை ஆபாசக் காணொளி எடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார் 26 வயது மாணவர் ஒருவர்.

எட்டுக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 16 குற்றச்சாட்டுகள், தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் கொள்ளப்படும்.

பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில் ஒரே வீட்டு வளாகத்தில் மாணவிகளுடன் தங்கியிருந்தார் அவர். ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் படுக்கையறைகள் இருந்தாலும் ஆறு பேரும் ஒரே குளியலறையைப் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு 22 வயது மாணவி ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது, பெண்ணுக்குத் தெரியாத வகையில் வெளியே நின்று படமெடுக்க முயன்றார் ஆடவர்.

சத்தம் கேட்டுக் கதவின் கீழே நோக்கிய பெண் அங்கே இரண்டு பாதங்களைப் பார்த்தும், கதவுக்கு மேல் கேமராவைப் பார்த்தும் கூச்சலிட்டார்.

உடனடியாக ஆடவர் பதிவான காணொளிகளை அழித்துவிட்டுத் தம்முடைய கைபேசியின் உறையையும் கழற்றிப் போட்டார்.

முதலில் தாம் செய்ததை மறுத்த ஆடவர் பின்னர் அதை மற்ற சக மாணவிகளிடம் ஒப்புகொண்டார். எனினும் இதற்கு முன் பல முறை அவர்களையும் படமெடுத்ததை அவர் குறிப்பிடவில்லை.

காவல்துறைப் புகாருக்குப் பின், ஆடவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் அவருடைய மின்னிலக்க கருவிகள் சில பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் அவர் ஏற்கெனவே அழித்த ஆபாசக் காணொளிகளைப் புலனாய்வு மென்பொருள் மூலம் மீட்டெடுத்தனர் காவல்துறையினர்.

பெண்ணின் மானத்தை இழிவுபடுத்தும் வகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக ஓராண்டுச் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இம்மாதம் 31ஆம் தேதி அவருக்கான தீர்ப்பு வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை மறைக்கும் நோக்கில், சந்தேக நபரின் அடையாளத்தை வெளியிட வேண்டாமென்ற தற்காப்புத் தரப்பின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டதால் அவரது விவரங்கள் வெளியிடப்படவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்