Images
  • flats
    கோப்புப் படம்: AFP/Roslan Rahman

தனியார் குடியிருப்புகளைக் குறுகிய கால வசிப்பிடமாகப் பயன்படுத்தும் தரநிலை குறித்து ஆலோசனை

நகர சீரமைப்பு ஆணையம், தனியார் குடியிருப்புகளைக் குறுகிய கால வசிப்பிடமாகப் பயன்படுத்தும் தரநிலை குறித்த கருத்துகளைப் பொதுமக்களிடமிருந்து பெற விரும்புகிறது.

2015ஆம் ஆண்டு தனியார் குடியிருப்புகளைக் குறுகியக் கால வசிப்பிடமாகப் பயன்படுத்துவது குறித்த கருத்துகளை அறிய பொதுக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

திரட்டப்பட்ட கருத்துகளைக் கொண்டு தரநிலை உருவாக்கப்பட்டது. ஆணையம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து தரநிலையை உருவாக்கியது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள தரநிலை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை ஆணையத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கலாம். அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் கருத்துகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


Top