Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நகர்ப்புறத்தில் மூத்தோர் வளர்க்கும் காய்கறிகள்

மூத்தோருக்கான Thye Hua Kwan நிலையங்களில் நகர்ப்புற விவசாயப் பகுதிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

மூத்தோருக்கான Thye Hua Kwan நிலையங்களில் நகர்ப்புற விவசாயப் பகுதிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

தோட்டக் கலையில் ஆர்வமுள்ளோர் எந்த வயதினராயினும் அங்கு சென்று காய்கறி விளைவிப்பதை முயன்று பார்க்கலாம்.

மூத்தோரின் மனநலத்தை மேம்படுத்துவதும், இளையோருடன் அவர்கள் கலந்துபழக ஊக்குவிப்பதும் அந்த முன்னோடித் திட்டத்தின் இலக்குகள்.

நிலையத்தின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் இன்று அந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சரும், நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கா. சண்முகம் அந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசினார்.

சுமார் 1,500 மூத்தோர் அதில் கலந்துகொண்டனர். புதிய முன்னோடித் திட்டத்தை அவர்கள் வரவேற்றனர்.

சோங் பாங், தாமான் ஜூரோங் உள்ளிட்ட 4 வட்டாரங்களில் உள்ள மூத்தோருக்கான Thye Hua Kwan நிலையங்களில் நகர்ப்புற விவசாயப் பகுதி அமைந்திருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்