Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டாயச் சிறுநீர்ச் சோதனைக்குச் செல்லாமல் போலி மருத்துவச் சீட்டுகளை ஒப்படைத்த பெண்ணுக்குச் சிறை

கட்டாயச் சிறுநீர்ச் சோதனைக்குச் செல்லாமல் போலி மருத்துவச் சீட்டுகளை ஒப்படைத்த குற்றத்தை மாது ஒருவர் இன்று ஒப்புக்கொண்டார்.

வாசிப்புநேரம் -

கட்டாயச் சிறுநீர்ச் சோதனைக்குச் செல்லாமல் போலி மருத்துவச் சீட்டுகளை ஒப்படைத்த குற்றத்தை மாது ஒருவர் இன்று ஒப்புக்கொண்டார்.

2017இல் 28 வயது ஷபாரியா , போதைப்பொருள் புழக்கத்தினால் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

2018இல் அவர், ஈராண்டுகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவர், வாரம் இருமுறை சிறுநீர்ச் சோதனைக்குச் செல்லவேண்டியிருந்தது.

அந்தக் கட்டத்தில் அவர் கர்ப்பமானார். அவரது இணை, மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் சிக்கி, செயலிழந்தார்.

ஷபாரியாவால் சோதனைகளுக்கு அடிக்கடி செல்ல இயலவில்லை.

அவரது நண்பர் ஒருவர் அவருக்குப் போலி மருத்துவச் சீட்டுகளைத் தயார் செய்துதர முன்வந்தார்.

அவர் டிசம்பர் 2018இலிருந்து, மார்ச் 2019 வரை 21 சோதனைகளுக்குச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக 14 போலி மருத்துவச் சீட்டுகளை ஒப்படைத்தார்.

மருத்துவச் சீட்டுகள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஷபாரியா தனது குற்றங்களை இன்று ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 26 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்