Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு வரவிருக்கும் அமெரிக்காவின் கிழக்காசிய வட்டாரத்துக்கான மூத்த அரசதந்திரி

சிங்கப்பூருக்கு வரவிருக்கும் அமெரிக்காவின் கிழக்காசிய வட்டாரத்துக்கான மூத்த அரசதந்திரி 

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் கிழக்காசிய வட்டாரத்துக்கான மூத்த அரசதந்திரி டேனியல் கிரிட்டன்பிரின்க் (Daniel Kritenbrink), சிங்கப்பூருக்கு வரவிருக்கிறார்.

அவர் இந்தோனேசியா, மலேசியா, தாய்லந்து ஆகிய நாடுகளுக்கும் செல்லவிருக்கிறார்.

இன்று தொடங்கும் திரு. கிரிட்டன்பிரின்கின் பயணம் டிசம்பர் 4ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் அமெரிக்கா இன்னும் கூடுதலாகப் பங்காற்ற அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உறுதிசெய்ததைத் தொடர்ந்து அந்த வருகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைச் சவால்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பு, மியன்மார் நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்கள் பற்றிக் கலந்துபேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளியல் உறவுகளை வலுப்படுத்துதல், நோய்ப்பரவலிலிருந்து இன்னும் சிறப்பாக மீண்டு வருதல் போன்றவை பற்றியும் திரு. கிரிட்டன்பிரின்க் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்