Images
  • Orchard mall
    கோப்புப்படம்: Raj Nadarajan/TODAY

இன்று முதல், இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே கடைத்தொகுதிகளுக்குள் செல்லலாம்

சிங்கப்பூரில் இன்று முதல் (13 அக்டோபர்), முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே கடைத்தொகுதிகளில் அனுமதிக்கப்படுவர்.

மேலும், இரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உணவங்காடி நிலையங்களிலோ, காப்பிக்கடைகளிலோ அமர்ந்து உணவருந்தலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், உணவை வாங்கி, பொட்டலமாகப் பெற்று அதனை வீட்டுக்குக் கொண்டுசெல்லலாம்.

12 வயதும், அதற்கும் கீழ் உள்ள சிறுவர்களும், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரும், பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றுகளைக் காண்பித்தால் உணவங்காடிகளிலும் கடைத்தொகுதிகளிலும் அனுமதிக்கப்படுவர்.

கடைத்தொகுதிகளில் இல்லாமல், தனியாக இருக்கக்கூடிய பேரங்காடி நிலையங்களுக்கு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் செல்லலாம்.  

Top