Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடைத்தொகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அனுமதிக்கப்படும் நடைமுறை - மக்களின் கருத்துகள்

கடைத்தொகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அனுமதிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இன்னும் சில நாள்களே உள்ளன.

வாசிப்புநேரம் -

கடைத்தொகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அனுமதிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இன்னும் சில நாள்களே உள்ளன.

இந்நிலையில் சிறப்பு அனுமதியைப் பெறும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரை அனுமதிப்பதற்கான வழிமுறைகளைக் கடைத்தொகுதிகள் ஆராய்ந்து வருகின்றன.

கடைத்தொகுதிகளுக்குள், எதிர்வரும் புதன்கிழமை முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே செல்லலாம்.

புதிய மாற்றத்தைப் பெரும்பாலோர் வரவேற்றுள்ளனர்.

கிருமித்தொற்றிலிருந்து, புதிய நடைமுறை கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என்று சிலர் கூறினர்.

ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கடைத்தொகுதிக்கு வந்தால் கிருமி தொற்றக்கூடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது.

இப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டோரை மட்டும் கடைத்தொகுதிக்குள் அனுமதிப்பது எனக்கு இன்னும் பாதுகாப்பாகத் தோன்றுகிறது.

என்று திரு. திரு சொன்னார்.

இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், கடைத்தொகுதிகளில் அமைந்துள்ள பராமரிப்பு, மருத்துவச் சேவைகளை நாட சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளமுடியும்.

கடைத்தொகுதிகளுக்குள் செல்ல அனுமதி பெறுவோர், பொறுப்பைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று சிலர் கருத்துரைத்தனர்.

கடைத்தொகுதிக்குள் உள்ள மற்ற கடைகளுக்குச் செல்வதை அவர்கள் தவிர்க்கவேண்டும்.

அதற்குக் கடைத்தொகுதிகளும் தகுந்த அமலாக்கப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

என்று திருவாட்டி அன்னா கூறினார்.

இந்நிலையில், இன்னும் சில நாள்களில் புதிய செயல்முறைகள் உறுதிப்படுத்தப்பட்டு ஊழியர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும் என்று கடைத்தொகுதிகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்