Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சுமார் 655,000 பேர் Booster தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

சிங்கப்பூரில் ஆக அண்மைய நிலவரப்படி, 655,029 பேர் கூடுதல் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சுமார் 655,000 பேர் Booster தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

(கோப்புப் படம்: Reuters/Sandra Sanders)

சிங்கப்பூரில் ஆக அண்மைய நிலவரப்படி, 655,029 பேர் கூடுதல் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், Booster என்றழைக்கப்படும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும். அது கிருமித்தொற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் Booster தடுப்பூசித் திட்டம்:

செப்டம்பர் 2021
- 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்பு - 79% போட்டுவிட்டனர் அல்லது பதிவு செய்துவிட்டனர்.

அக்டோபர் 2021
- 50 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு அழைப்பு
(82% போட்டுவிட்டனர் அல்லது பதிவு செய்துவிட்டனர்)

- சுகாதார ஊழியர்கள், முன்னிலை ஊழியர்கள் ஆகியோருக்கு அழைப்பு

- 30 வயதுக்கு மேற்பட்ட, முழுமையாகத் தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் ஆனவர்களுக்கு அழைப்பு

ஆக அண்மைய நிலவரப்படி, 30 முதல் 49 வயது வரையில் உள்ள சுமார் 190,000 பேருக்குக் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 138,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்