Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 12 வயதிலிருந்து 39 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ளலாம்

முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது கிருமித்தொற்றுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் என்று ஆதாரங்கள் சுட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 12 வயதிலிருந்து 39 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ளலாம்

(படம்:Facebook/Ministry of Education)

சிங்கப்பூரில் 12 வயதிலிருந்து 39 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பதிந்துகொள்ளலாம் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.

அவர்கள் நாளையிலிருந்து Vaccine.gov.sg என்ற இணையத்தளம் மூலம் தடுப்பூசிக்குப் பதியலாம்.

12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தடுப்பூசிக்குப் பதிய அவர்கள் பிறந்தநாளை இவ்வாண்டு கடந்திருக்கவேண்டும், பதிவு செய்ததை அடுத்து குறுஞ்செய்தி மூலம் தடுப்பூசிக்கான நாள் குறித்து அறிவிக்கப்படும்.

கிருமித்தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரும் முதல் தடுப்பூசியையாவது போட்டுக்கொள்ளும்படி ஆலோசனை கூறப்படுகிறது.

முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது கிருமித்தொற்றுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் என்று ஆதாரங்கள் சுட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தோர் நாளைமுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பதிந்துகொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்