Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலருக்கு உடல்நலப் பிரச்சினைகள்

சிங்கப்பூரில் தற்காலிகமாய்த் தடைசெய்யப்பட்ட சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலர் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தற்காலிகமாய்த் தடைசெய்யப்பட்ட சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலர் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இருப்பினும் அவர்கள் அனைவரும் அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அது சொன்னது.

தென் கொரியாவில் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலர் மாண்டனர்.

அதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறிப்பிட்ட அந்த இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் தற்காலிகமாக இங்குத் தடைசெய்யப்பட்டன.

SK Bioscience நிறுவனத்தின் SkyCellflu Quadrivalent தடுப்பூசியை சிங்கப்பூரில் இவ்வாண்டு போட்டுக்கொண்டவர்களில் சிலர் தொண்டையில் வலி, வாந்தி, அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் இரண்டு முறை புகார்கள் கிடைத்ததாகச் சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது.

Sanofi Pasteur நிறுவனத்தின் Vaxigrip Tetra தடுப்பூசியும் தற்காலிகமாய் இங்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.

அந்த இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் தடைசெய்யப்பட்ட பின்னர், மற்ற தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாக மருத்துவக் குழு ஒன்று கூறியது.

GSK நிறுவனத்தின் Fluarix Tetra தடுப்பூசியையும், Abbott Laboratories நிறுவனத்தின் Influvac Tetra தடுப்பூசியையும் மருத்துவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்