Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வண்ணத்தமிழ் 2019 : உற்சாகமாக வண்ணம் தீட்டிய பாலர்

வண்ணத்தமிழ் எனும் பாலருக்கான (K1 & K2) வண்ணம் தீட்டும் போட்டிக்கு, ஆறாவது ஆண்டாக உறுமி மின்னிதழ் இன்று ஏற்பாடு செய்திருந்தது.  

வாசிப்புநேரம் -

வண்ணத்தமிழ் எனும் பாலருக்கான (K1 & K2) வண்ணம் தீட்டும் போட்டிக்கு, ஆறாவது ஆண்டாக உறுமி மின்னிதழ் இன்று ஏற்பாடு செய்திருந்தது.

காலை 10மணி முதல் பிற்பகல் 12:30மணி வரை தேசிய நூலகவாரியக் கட்டடத்தில் அது நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 155 பாலர் பள்ளி மாணவர்களைச் சேர்த்து சுமார் 300 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். படத்துடன் தமிழ் எழுத்துகளுக்கு வண்ணம் தீட்டியும் மகிழ்ந்தனர் சிறார்.

நிகழ்ச்சியில், வெற்றியாளர்களுக்கு அவர்களின் பெற்றோரே சிறப்பு விருந்தினராக மாறிப் பரிசு வழங்கினார்கள்.

selfie படம் எடுத்து அதன் மூலம் தமிழ் மீதான அன்பை வெளிப்படுத்தும் போட்டி, பெற்றோருக்கென நடைபெற்றது.

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் (VR) விலங்குகளைத் தமிழ் வார்த்தையுடன் அறிமுகம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு (TLLPC) ஆதரவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்