Images
  • vege1
    (படம்:Pixabay)

காய்கறிகள் பிடிக்கவில்லையா; போதவில்லையா?

சிறுவர்களோ, பெரியவர்களோ சாப்பாட்டுத் தட்டில் காய்கறிகளைப் பார்த்தால் நிறைய பேர் முகம் சுளிக்கத் தான் செய்கின்றனர்.

மாமிசம் இன்னும் வேண்டும் என்று தயங்காமல் கடைக்காரரிடம் கேட்போர் பெரும்பாலான வேளைகளில் காய்கறிகளை அவ்வாறு கேட்பதில்லை.

சில ஆண்டுக்கு முன்னர் நடத்தப்பட்ட தேசிய ஊட்டச்சத்து ஆய்வில், சிங்கப்பூரர்களில், 10இல் 9 பேர் போதிய பழங்களும் காய்கறிகளும் சாப்பிடுவதில்லை என்று தெரியவந்தது.

அன்றாடம் எவ்வளவு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்குத் தெரிவதில்லை. அதனைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் முயற்சி செய்வதில்லை என்று உணவியல் நிபுணர் ஜேக்லீன் ரியுட்டன்ஸ் கூறினார்.

ஒரு நாளைக்கு இரண்டு பங்கு காய்கறிகள் சாப்பிடுவதைச் சுகாதார மேம்பாட்டு வாரியம் பரிந்துரைக்கிறது.

மூன்றில் ஒரு சிங்கப்பூரர் மட்டுமே அந்த அளவைச் சாப்பிடுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சராசரியாக ஒரு சிங்கப்பூரர் 1.78 பங்கு மட்டுமே காய்கறிகளைச் சாப்பிடுவதாகத் திருவாட்டி ரியுட்டன்ஸ் கூறினார்.


கடைகளுக்குச் சாப்பிடப் போகும்போது தக்காளி, கேரட், குடை மிளகாய், வெங்காயம் போன்றவற்றைக் கூடுதலாகக் கேட்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

தேங்காய்ப் பாலில் சமைத்த காய்கறிகள், பார்ப்பதற்கு அதிகம் எண்ணெய் பசையுடையதாக இருக்கும் காய்கறிகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பளிச்சென்ற நிறம் கொண்ட காய்கறிகளில் ஊட்டச்சத்து அதிகமிருக்கும்.

பச்சைக் காய்கறிகளை மஞ்சள் நிறமாகும்வரைச் சமைப்பதைத் தவிர்க்கவும். அவற்றில் உள்ள ஊட்டச் சத்து குறைந்துவிடும் என்பது அதற்குக் காரணம்.

Top