Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூளை அறுவை சிகிச்சைக்குப்பின் செயலிழந்த பெண் - தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை மீது வழக்கு

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளாக செயலிழந்த நிலையில் இருக்கும் பெண்ணின் குடும்பத்தார் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
மூளை அறுவை சிகிச்சைக்குப்பின் செயலிழந்த பெண் - தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை மீது வழக்கு

(படம்: Courtesy of Mdm Goh's family)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளாக செயலிழந்த நிலையில் இருக்கும் பெண்ணின் குடும்பத்தார் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

அறுவை சிகிச்சையை வழிநடத்திய தலைமை நரம்பியல் நிபுணர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

64 வயது கோ குவான் சின் 2014இல் தலையின் பின்புறத்திலிருந்த பெரிய கட்டியை நீக்குவதற்காகத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர்களை அணுகியிருந்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் திருவாட்டி கோவின் மூளையில் இரத்தச் கசிவு ஏற்பட்டது.

அதற்குக் காரணமான இரத்தக் கட்டியை நீக்கினால் திருவாட்டிக் கோவின் உயிருக்கு ஆபத்து என்பதால் மருத்துவர்கள் மூளையில் தேங்கிய திரவத்தை மட்டும் வடிய வைத்தனர்.

திருவாட்டி கோவின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றபோதும் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக அவர் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்