Images
  • vetri vizha (1)
    (படம்: வில்சன் சைலஸ்)

மாணவர்களின் படைப்பாற்றலைப் பாராட்டிய 'வெற்றி விழா'


கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்த்துறை, சுவையான வகையில் தங்கள் எழுத்துத் திறனை வெவ்வேறு தளங்களில் வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

படைப்பாற்றலை சிறந்த வகையில் வெளிப்படுத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

'நானும் ஒரு படைப்பாளி' என்ற பெயரில் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்த்துறை, பட்டறைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் சிறுகதை எழுதுதல், கட்டுரை/வசனம் எழுதுதல், கவிதை எழுதுதல் ஆகியவை குறித்து வெவ்வேறு நிலை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது.

அதில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றை இன்றைய 'வெற்றி விழா' நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் முன்னிலையில் படைத்துக்காட்டினர்.


மாணவர்களின் கற்றல் பயணத்தைப் படம்பிடித்துக் காட்டவேண்டும்;
மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஊக்குவிக்கவேண்டும்;
மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் அடைந்திருக்கும் வெற்றியைப் பாராட்டவேண்டும்;

இதுவே நிகழ்ச்சியின் நோக்கம் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.

நிகழ்ச்சியில், மூத்த தமிழறிஞர் டாக்டர் சுப திண்ணப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Top