Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சிங்கப்பூரில் சில வியட்நாமியர்களின் தகாத நடத்தை, வியட்நாமியக் குடியிருப்பாளர்களைப் பிரதிபலிக்கவில்லை'

சிங்கப்பூரில் சில வியட்நாமியர்களின் தகாத நடத்தை, இங்குள்ள வியட்நாமியக் குடியிருப்பாளர்களைப் பிரதிபலிக்கவில்லை என்று சிங்கப்பூரிலுள்ள வியட்நாமியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சில வியட்நாமியர்களின் தகாத நடத்தை, இங்குள்ள வியட்நாமியக் குடியிருப்பாளர்களைப் பிரதிபலிக்கவில்லை என்று சிங்கப்பூரிலுள்ள வியட்நாமியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது சுமார் 15,000 வியட்நாமியர்கள் வசிக்கின்றனர்.

அவர்களில் பலர் உணவு-பானத் துறையில் பணிபுரிகின்றனர்;
அல்லது இங்கே கல்வி கற்க வந்துள்ளனர் என்று துணைத் தூதர் லே சொங் டங் (Le Cong Dung) கூறினார்.

மிகக் குறைவானவர்களே KTV இசைக்கூடங்களில் வேலை செய்வதை அவர் சுட்டினார்.

வியட்நாமியப் பெண்ணுக்கு முதலில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது துரதிர்ஷ்டம் என்று திரு. லே கூறினார்.

அதனால் வியட்நாமியச் சமூகத்தினர் KTV இசைக்கூடங்களில் பணிபுரிவதாகத் தவறான கண்ணோட்டம் உருவாகியுள்ளதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூரில் வசிக்கும் வியட்நாமியர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாக வந்துள்ள தகவல்கள் குறித்துத் திரு. லே பேசினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்