Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலர் பள்ளி உதவித்தொகை மூலம் இன்னும் அதிகமான இந்தியப் பெற்றோர் பயன்பெறுவர் : நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்

சிங்கப்பூரில் இந்தியப் பெற்றோரில் சுமார் 15 விழுக்காட்டினர் பிள்ளைகளை பாலர்பள்ளிக்கு அனுப்பவில்லை என்பது மூவாண்டுக்கு முன் சிண்டா நடத்திய ஆய்வில் தெரியவந்தது.  

வாசிப்புநேரம் -
பாலர் பள்ளி உதவித்தொகை மூலம் இன்னும் அதிகமான இந்தியப் பெற்றோர் பயன்பெறுவர் : நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்

படம்: PCF Sparkletots

சிங்கப்பூரில் இந்தியப் பெற்றோரில் சுமார் 15 விழுக்காட்டினர் பிள்ளைகளை பாலர்பள்ளிக்கு அனுப்பவில்லை என்பது மூவாண்டுக்கு முன் சிண்டா நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

குறிப்பாக வசதி, செலவு ஆகியவற்றைக் காரணம் காட்டி அவர்கள் பிள்ளைகளைப் பாலர்பள்ளியில் சேர்க்கவில்லை என செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கூறினார்.

இவ்வாண்டின் தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் லீ அறிவித்த சலுகைகளைத் தொடர்ந்து இன்னும் அதிகமானோர் பிள்ளைகளைப் பாலர்பள்ளியில் சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாலர் பள்ளிக் கட்டண மானியங்களைப் பெரும்பாலான பெற்றோர் வரவேற்றதாகவும் திரு. விக்ரம் நாயர் சொன்னார்.

தேசிய தினக் கூட்ட உரை குறித்து செய்திக்காக REACH கருத்தறியும் பிரிவு ஏற்பாடு செய்த சிறப்புப் பேட்டியில் அவர் அதனைத் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை ஒலி 96.8-இன் மூலம் தேசிய தினக் கூட்ட உரை தொடர்பாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் திரு. விக்ரம் நாயர்.

மறுவேலை வாய்ப்பு, ஓய்வுபெறும் வயது, மனிதவளம், தொழில்துறை முதலிய அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இன்று இரவு 8:30 மணி தொலைக்காட்சிச் செய்தியில் மேல்விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்