Images
  • vistara
    படம்: Reuters/Francis Mascarenhas

விஸ்ட்டாரா புதிய விமானச் சேவை சிங்கப்பூர் பயணத்துறைக்கு எவ்வாறு உதவும்?

இந்தியாவின் விஸ்ட்டாரா விமான நிறுவனம் சிங்கப்பூருக்குத் தனது விமானச் சேவையைத் தொடங்கவுள்ளது.

புதுடில்லியிலிருந்தும் மும்பையிலிருந்தும் தினமும் இரண்டு முறை சிங்கப்பூருக்கு விமானச் சேவைகளை எதிர்பார்க்கலாம்.

புதிய விஸ்ட்டாரா விமானச் சேவை சிங்கப்பூர் பயணத்துறைக்கு எவ்வாறு உதவும்?புதிய விமானச் சேவை பயணத்துறையை வளர்க்க முக்கியப் பங்கு வகிக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழக வட்டார இயக்குநர் (இந்தியா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா) திரு. ஸ்ரீதர் பதிலளித்தார்.

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளில் இந்தியாவிலிருந்து வருவோரின் எண்ணிக்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.

குறிப்பாக, புதுடில்லி, மும்பை ஆகிய நகரங்களிலிருந்து சிங்கப்பூருக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுப்பயணிகள் வருகின்றனர்.

பொழுதுபோக்கு, சொகுசுக் கப்பல் பயணம், தொழில் ஆகிய காரணங்களுக்காக அவர்கள் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.

புதிய விமானச் சேவை, சிங்கப்பூருக்குக் கூடுதலான சுற்றுப்பயணிகளைக் கொண்டு வர உதவும்."

என்றார் திரு. ஸ்ரீதர்.  

Top