Images
  • vistara (1)
    (படம்: Reuters)

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்

இந்தியாவின் விஸ்ட்டாரா விமான நிறுவனம் அனைத்துலக விமானச் சேவைகளைத் தொடங்கவிருக்கிறது.

அதன் தொடர்பில் நிறுவனம் முதலில் சிங்கப்பூருக்குத் தனது விமானச் சேவையை வழங்கவிருக்கிறது.

தினமும் இரண்டு முறை சிங்கப்பூருக்கு அதன் விமானச் சேவைகளை எதிர்பார்க்கலாம்.
புதுடில்லியிலிருந்தும் மும்பையிலிருந்தும் அவை சேவையாற்றும்.

புதுடில்லிக்கும் சிங்கப்பூருக்குமான சேவை அடுத்த மாதம் ஆறாம் தேதியும் மும்பைக்கும் சிங்கப்பூருக்குமான சேவை அடுத்த மாதம் ஏழாம் தேதியும் தொடங்கும்.

தனது அனைத்துலகக் கட்டமைப்பை இதர நாடுகளுக்கும் விரிவுபடுத்தவிருப்பதாக விஸ்ட்டாரா தெரிவித்தது.

போயிங் 737-800NG ரகத்தைச் சேர்ந்த அந்த விமானங்கள் பிஸினஸ் வகுப்பு, சாதாரண வகுப்புப் பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

தனது அனைத்துலகச் சேவைக்கான முதல் நகரமாக சிங்கப்பூரைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக விஸ்ட்டரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

வர்த்தகத்திற்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் அதிக வாய்ப்புகளைக் கொண்ட இடமாக சிங்கப்பூர் அமைந்திருப்பதை அவர் சுட்டினார். 

Top