Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடல் போக்குவரத்துச் சுதந்திரத்துக்கு மிரட்டல் விடுக்கும் எத்தகைய முயற்சியையும் சிங்கப்பூர் எதிர்க்கும்

அந்த ஒப்பந்தத்தை உறுதிபடுத்த, விரைவில் செயல்படுமாறு ஆசியான் நாடுகளையும், இந்தியாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.

வாசிப்புநேரம் -
கடல் போக்குவரத்துச் சுதந்திரத்துக்கு மிரட்டல் விடுக்கும் எத்தகைய முயற்சியையும் சிங்கப்பூர் எதிர்க்கும்

(படம்:MONEY SHARMA/AFP)

கடல் போக்குவரத்துச் சுதந்திரத்துக்கு மிரட்டல் விடுக்கும் எத்தகைய முயற்சியையும் சிங்கப்பூர் எதிர்ப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற பத்தாவது டில்லி கலந்துயாடலின் தொடக்க உரையில் அவர் அது பற்றி பேசினார்.

இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தில், நியாயமான, வெளிப்படையான, சமமான விதிமுறைகளைக் கொண்ட ஒழுங்கு முறை தேவை என்றார் அவர்.

"இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான கடல்துறைப் பாதுகாப்பை மேம்படுத்துவது" என்பது அந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள்.

அதை ஒட்டி பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணன், கடல் போக்குவரத்துச் சுதந்திரத்துக்கு மிரட்டல் விடுக்கும் எத்தகைய முயற்சியையும் சிங்கப்பூர் எதிர்ப்பதை வலியுறுத்தினார்.

வட்டாரப் பொருளியல் ஒத்துழைப்புக்கான பங்காளித்துவம் பற்றியும் அவர் கருத்துரைத்தார்.

உலக அளவில் தன்னைப் பேணித்தனப் போக்கு அதிகரித்து வருவதால் அந்த வர்த்தக உடன்பாடு முக்கியம் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
அந்த ஒப்பந்தத்தை உறுதிபடுத்த, விரைவில் செயல்படுமாறு ஆசியான் நாடுகளையும், இந்தியாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, இந்த வட்டாரப் பொருளியல்களுக்குப் பலனையே அளிக்கும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்