Images
  • Vivian Kashmir condolences (1)

ஹாங்காங் போராட்டங்களைச் சிங்கப்பூர் கவலையுடன் கூர்ந்து கவனிக்கிறது: வெளியுறவு அமைச்சர்


ஹாங்காங்கில் தொடரும் போராட்டங்களை, சிங்கப்பூர் கவலையுடன் கூர்ந்து கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தற்போது ஹாங்காங்கில் உள்ள சிங்கப்பூரர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா விதமான முயற்சிகளையும் தம்முடைய அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

வட்டாரத்தில் நிலவும் அசாதாரணச் சூழல் தனிப்பட்ட முறையில் தமக்குக் கவலையளிப்பதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.  

Top