Images
  • Vivian RCEP
    (படம்: Hanidah Amin/ CNA)

RCEP உடன்பாட்டுக்கு 15 நாடுகள் இணக்கம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனை: வெளியுறவு அமைச்சர்


RCEP எனும் வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ வர்த்தக உடன்பாட்டுக்கு, 15 நாடுகள் இணக்கம் தெரிவித்திருப்பது, குறிப்பிடத்தக்க சாதனை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

CNAவின் 938 வானொலிக்கு அளித்த நேர்காணலில், இந்தியா அந்த உடன்பாட்டிலிருந்து விலகிக்கொண்டாலும் இதர நாடுகள் ஒப்புதல் தெரிவித்தது சாதனையே என்று அவர் தெரிவித்தார்.

தீர்க்கப்படவேண்டிய சில விவகாரங்கள் இருந்தாலும் இதுவரை செய்யப்பட்ட உடன்பாடுகளில் RCEP உடன்பாடே பல நாடுகளை உள்ளடக்கிய ஆகப் பெரிய தடையற்ற வர்த்தக உடன்பாடு என்று டாக்டர் பாலகிருஷ்ணன் விவரித்தார்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29 விழுக்காட்டையும் அனைத்துலக வர்த்தகத்தில் 27 விழுக்காட்டையும் RCEP உடன்பாடு பிரதிநிதிப்பதை அவர் சுட்டினார்.

இந்தியா அந்த உடன்பாட்டை ஏற்க மறுப்பதற்கு, உள்ளூர் அரசியல் நெருக்குதல் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார். 

Top