Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சிங்கப்பூர் - மலேசியா விவகாரத்தில் இருதரப்பும் நன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்': அமைச்சர் விவியன்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க   இருதரப்பும் நன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க இருதரப்பும் நன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (ஜனவரி 14) அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோது அவர் அதனை வலியுறுத்தினார்.

தற்போதைய சிரமங்களைத் தாண்டி, மேம்பட்ட உறவுக்காகவும் இருதரப்புக்கும் பயனளிக்கும் மேலும் அணுக்கமான ஒத்துழைப்புக்காகவும் மலேசியாவுடன் தொடர்ந்து பணியாற்ற சிங்கப்பூர் விரும்புவதாக அவர் கூறினார்.

எனினும், இருதரப்பும் அனைத்துலகச் சட்டங்களுக்கு இணங்க நன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை மதித்து நடக்க வேண்டும் என டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

(படம்: MFA)

எல்லாப் பிரச்சினைகளுக்கும் விரைவாகவும் சுமுகமாகவும் தீர்வு ஏற்படும் எனத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும், மலேசியாவுடன் அமைதியான, ஆக்ககரமான முறையில் பேச்சு நடத்த சிங்கப்பூர் முனையும் என்றார் அவர்.

மலேசியாவுடனான ஆகாயவெளி, கடற்பகுதி, தண்ணீர் விவகாரங்கள் குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாட்டை விவரித்தார் டாக்டர் விவியன்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்