Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'உலக அமைப்புகள், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப மாற்றம் கண்டு, வலுப்பெற வேண்டும்': அமைச்சர் பாலகிருஷ்ணன்

விதிமுறைகளின் அடிப்படையிலான முறை, சிறிய நாடுகள், பெரிய நாடுகள் என அனைத்து நாடுகளுக்கும் பலன் அளித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'உலக அமைப்புகள், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப மாற்றம் கண்டு, வலுப்பெற வேண்டும்': அமைச்சர் பாலகிருஷ்ணன்

(படம்: Ministry of Foreign Affairs, Singapore)

விதிமுறைகளின் அடிப்படையிலான முறை, சிறிய நாடுகள், பெரிய நாடுகள் என அனைத்து நாடுகளுக்கும் பலன் அளித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

ஆனால், உலகச் சுகாதார அமைப்பு, ஐக்கிய நாட்டு நிறுவனம் போன்ற அமைப்புகள், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப மாற்றம் கண்டு, வலுப்பெற வேண்டும் என்றார் அவர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு சொன்னார்.

உலக வர்த்தக அமைப்பை அவர் முன்-உதாரணமாகச் சுட்டினார்.

அந்த அமைப்பு அனைவருக்கும் பல்லாண்டு காலமாக வளப்பத்தைக் கொண்டுவந்துள்ளது என்றார் அமைச்சர் பாலகிருஷ்ணன்.

ஆனால், வேளாண், உற்பத்தி அடிப்படையிலான உலகப் பொருளியலுக்கேற்ற வகையில் அதன் விதிமுறைகள் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மின்னிலக்க யுகம் தொடர்ந்து மாறிவருவதால், மின்னிலக்கச் சேவைகள், மதிநுட்புச் சொத்து போன்றவற்றுக்கு ஏற்புடைய விதிமுறைகளை உலக வர்த்தக அமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்றார் அமைச்சர் பாலகிருஷ்ணன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்