Images

உறவுகளை வளர்க்கும் சமூகத் தோட்டம்

உலகத் தொண்டூழியர் தினத்தையொட்டி தேசியப் பூங்காக் கழகம் அதன் தொண்டூழியர்களுக்குப் புதிய அனுகூலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் மூலம் பூங்காக்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வர்த்தக, உணவு, பானக் கடைகளில் தொண்டூழியர்கள் விலைக் கழிவுகளைப் பெற முடியும்.

சிறப்பான சுற்றுலாக்கள், பட்டறைகள், பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றில் பங்குபெறும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.

அனுகூலங்களைப் பெறுவதற்கான உறுப்பினர் அட்டை கட்டங்கட்டமாய்த் தொண்டூழியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இயற்கையைப் பாதுகாத்தல், பராமரித்தல், கற்றல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடும் 45,000 தொண்டூழியர்கள் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.

அவர்களில் ஒருவர் திருவாட்டி லலிதா.


Top