Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிகமான வாக்காளர்கள்..குறைவான வாக்காளர்கள்...எந்தெந்தத் தொகுதிகளில்?

சிங்கப்பூரின் எந்தெந்த தனித்தொகுதிகளில் குறைவான வாக்காளர்கள் உள்ளனர்? எந்தெந்த குழுத்தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்? 

வாசிப்புநேரம் -
அதிகமான வாக்காளர்கள்..குறைவான வாக்காளர்கள்...எந்தெந்தத் தொகுதிகளில்?

(கோப்புப் படம்: Alif Amsyar/ CNA)

சிங்கப்பூரில் நடைபெறும் ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் தொகுதிகளை மறுஆய்வு செய்து அதன் விவரங்களைத் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு வெளியிடும்.

தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருந்தால் அல்லது குறைந்திருந்தால் அந்த விவரங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் 14 தனித்தொகுதிகள், நான்கு உறுப்பினர்கள் கொண்ட 6 குழுத்தொகுதிகள், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட 11 குழுத்தொகுதிகள் ஆகியவற்றில் போட்டியிடலாம்.

குறைவான வாக்காளர்களைக் கொண்டுள்ள தனித்தொகுதிகள் யாவை? அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள குழுத்தொகுதிகள் என்னென்ன?


தனித்தொகுதிகள்

1. பொத்தோங் பாசிர் - 19,740
2. யூஹுவா - 21,376
3. கெபுன் பாரு - 22,653
4. மேரிமவுண்ட் - 23,444
5. மவுண்ட்பேட்டன் - 24,267

4 உறுப்பினர் குழுத்தொகுதிகள்

1. செங்காங் - 120,166
2. மார்சிலிங்-இயூ டீ -117,176
3. ஹாலந்து-புக்கிட் தீமா - 115,012
4. ஜாலான் புசார்- 107,936
5. சுவா சூ காங் - 106,693


5 உறுப்பினர் குழுத்தொகுதிகள்

1. அங் மோ கியோ- 185,465
2. பாசிர் ரிஸ்- பொங்கோல் -166,587
3. தெம்பனிஸ் - 151,708
4. அல்ஜூனிட்- 151,007
5. செம்பவாங்- 147,876 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்