Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடுப்பூசிப் பயணத்தடத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் 7 நாளுக்கு அன்றாட COVID-19 பரிசோதனை

தடுப்பூசிப் பயணத்தடத்தின் கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளும் 7 நாளுக்கு அன்றாடம் COVID-19 பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

தடுப்பூசிப் பயணத்தடத்தின் கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளும் 7 நாளுக்கு அன்றாடம் COVID-19 பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் (டிசம்பர் 2021) 6ஆம் தேதி இரவு மணி 11.59இலிருந்து நடப்புக்கு வரும்.

அது 4 வாரத்துக்கு அதாவது அடுத்த மாதம் (ஜனவரி 2022) 2ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

ஓமக்ரான் கிருமி பரவுவதற்கு எதிராக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தற்போது, தடுப்பூசிப் பயணத்தடத்தின் கீழ் சிங்கப்பூர் வருவோர், இங்கு வந்தவுடன் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், 3ஆவது நாளிலும் 7ஆவது நாளிலும் விரைவுப் பரிசோதனை நிலையத்தில் ART பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

எஞ்சிய நாள்களில், அவர்கள் சுயமாக ART பரிசோதனை செய்துகொண்டு, முடிவுகளை இணையம் வழி சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த 7 நாளிலும் கிருமித்தொற்று இல்லை என்பதை ART பரிசோதனை மூலம் உறுதிசெய்த பின்பே அவர்கள் வெளியே செல்லலாம்.

கூடுதல் பரிசோதனைகள், மலேசியாவிலிருந்து தரைவழி சிங்கப்பூர் வருவோருக்கும் பொருந்தும்.

-CNA/mi(gs) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்