Images
  • people general
    கோப்புப் படம்: Reuters 

சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு $600 மில்லியன்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், இம்மாத இறுதிக்குள் 90,000 நிறுவனங்களுக்கு 600 மில்லியன் வெள்ளி வழங்கப்படும்.

மொத்தத் தொகையில் 70 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்மூலம் 600,000க்கும் அதிகமான சிங்கப்பூர் ஊழியர்கள் பயன்பெறுவர்.

கடந்த ஈராண்டுகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வில் 20 விழுக்காட்டுக்கு, இந்த மாதம் வழங்கப்படும் சம்பள உதவித்தொகை மூலம், அரசாங்கம் நிதி வழங்கும்.

சம்பள உதவித்தொகைத் திட்டம் 2013ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

2013ஆம் ஆண்டுக்கும், 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்கு அந்தத் திட்டம் ஆதரவளித்து வருகிறது.

பிறகு, 2015ஆம் ஆண்டிலும், 2018ஆம் ஆண்டிலும் அந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது.

உருமாறும் முயற்சிகளில் ஈடுபடும் வர்த்தகங்களுக்கு ஆதரவு அளிப்பதும் உற்பத்தித் திறன் மூலம் கிடைக்கும் லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்வதை ஊக்குவிப்பதும் திட்டத்தின் நோக்கம்.


Top