Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் சுமார் 90,000 முதலாளிகளுக்கு 800 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட உதவித்தொகை

சிங்கப்பூர்: சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் சுமார் 90,000 முதலாளிகளுக்கு 800 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் சுமார் 90,000 முதலாளிகளுக்கு 800 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட உதவித்தொகை

(படம்: Reuters/Edgar Su)


சிங்கப்பூர்: சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் சுமார் 90,000 முதலாளிகளுக்கு 800 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

நிதி அமைச்சும் உள்நாட்டு வருவாய் ஆணையமும் இன்று (மார்ச் 19) அதனைத் தெரிவித்தன.

இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அந்தத் தொகை வழங்கப்படும்.

4000 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான மாதச் சம்பளம் பெறும் 600 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கப்பூர் ஊழியர்களின் சம்பள உயர்வில் 20 விழுக்காட்டை, சம்பள உதவித் தொகைத் திட்டத்தின்மூலம் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.

கடந்த மூவாண்டுகளாக அந்தத் திட்டம் நடப்பிலுள்ளது.

இதுவரை வழங்கப்பட்டுள்ள சம்பள உதவித்தொகையில் 71விழுக்காட்டை, சிறிய நடுத்தர நிறுவனங்கள் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

சம்பள உதவித் தொகைக்குத் தகுதி பெறும் முதலாளிகள், இம்மாதம்
31ஆம் தேதிக்குள் கடிதங்களைப் பெறுவர்.

உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் முதலாளிகள், தாங்கள் தகுதிபெறுகிறோமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் சம்பள உதவித்தொகைத் திட்டத்தை 2020 வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.

ஆனால், உதவித்தொகையின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இவ்வாண்டு 20 விழுக்காடாக இருக்கும் உதவித்தொகை, அடுத்த ஆண்டு 15 விழுக்காடாகக் குறைக்கப்படும்.

2020இல் அது 10 விழுக்காடாகும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்