Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாதுகாப்பு, நிலவனப்பு, மின்தூக்கி, மின்படிக்கட்டுத் துறைகளின் ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த பேச்சு விரைவில் நிறைவடையக்கூடும்

உணவுச் சேவைகள், சில்லறை வணிகத்துறை, கழிவு நிர்வாகம் போன்றவற்றுக்கான புதிய முத்தரப்புக் குழுக்களின் பேச்சுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக அவர் சொன்னார்.

வாசிப்புநேரம் -
பாதுகாப்பு, நிலவனப்பு, மின்தூக்கி, மின்படிக்கட்டுத் துறைகளின் ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த பேச்சு விரைவில் நிறைவடையக்கூடும்

(படம்: Gaya Chandramohan)

பாதுகாப்பு, நிலவனப்பு, மின்தூக்கி, மின்படிக்கட்டுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படக்கூடும்.

கட்டம்கட்டமாக அதிகரிக்கும் ஊதியத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை அடுத்த சில மாதத்தில் நிறைவுபெறும் என்று நம்புவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

உணவுச் சேவைகள், சில்லறை வணிகத்துறை, கழிவு நிர்வாகம் போன்றவற்றுக்கான புதிய முத்தரப்புக் குழுக்களின் பேச்சுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக அவர் சொன்னார்.

கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் ஊதியத் திட்டத்தின்கீழ் வெவ்வேறு வேலைகளைச் செய்வோரைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்படுகிறது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியம் மற்றும் அவர்களின் நலன் குறித்து ஆராய்வதற்குப் பணிக்குழு தொடங்கப்பட்டது.

ஊதிய உயர்வுக்கு ஏற்ப நிறுவனங்கள் மாற்றங்களைச் செய்வதற்குக் கால அவகாசம் வழங்கப்படும் என்று மனிதவள மூத்த துணையமைச்சரும் பணிக்குழுவை வழிநடத்தும் தலைவருமான திரு ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்