Images
  • Walk a Jog
    (படம்: ஏற்பாட்டுக் குழு)

வசதியற்றோருக்கு இயந்திர சக்கர நாற்காலிகளை நன்கொடையாகக் கொடுத்த “Walk A Jog 2018” நிகழ்ச்சி


டாங்க் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலின் ஏற்பாட்டில், “Walk A Jog 2018” எனும் பெருநடை இடம்பெற்றுள்ளது.


நிகழ்ச்சியில், மனநலம் குன்றியோருக்கான SunLove Home இல்லத்திற்கு இலவச நடமாடும் மருத்துவச் சேவைக்கான பேருந்தும், வசதியற்றோருக்கு இயந்திர சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.


காலை 7 மணிக்குப் பெருநடை தொடங்கியது.

சுமார் எட்டே முக்கால் மணியளவில் இயந்திர சக்கர நாற்காலிகள் நன் கொடையாக வழங்கப்பட்டன.

சுமார் 9 மணிக்கு, இலவச மருத்துவச் சேவைக்கான பேருந்து இல்லத்திற்கு வழங்கப்பட்டது.

பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, கல்வி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.


சுமார் 500 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

Top