Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மார்ச் இறுதிவரை வெப்பமான வானிலை தொடரும்: வானிலை ஆய்வகம்

சிங்கப்பூரில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வகம் இன்று (மார்ச் 15) தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மார்ச் இறுதிவரை வெப்பமான வானிலை தொடரும்: வானிலை ஆய்வகம்

(படம்: Chew Hui Min)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வகம் இன்று (மார்ச் 15) தெரிவித்துள்ளது.

இம்மாதத்தின் இறுதி வாரத்தில் பெரும்பாலான நாட்களில் மதிய நேரத்தில் கொஞ்ச நேரம் இடியுடன் கூடிய மழை பெய்து வெப்பம் கொஞ்சம் தணியக்கூடும் என்றும் அது கூறியது.

சில நாள்களில் மழை மாலை வரை நீடிக்கக்கூடும்.

மார்ச் மாதத்தின் கடைசி இரு வாரங்கள் பொதுவாக வெப்பமாக இருக்கும் என்றும் ஆய்வகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸுக்கும் 34 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

மழை இல்லாத நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்