Images
  • football club
    படம்: Warriors Football Club/Facebook

உரிய நேரத்தில் சம்பளத்தைத் தரத் தவறியதாக Warriors FC காற்பந்துக் குழுவின்மீது குற்றச்சாட்டு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர் பிரிமியர் லீகின் Warriors FC காற்பந்துக் குழு, தங்கள் ஊழியர்களின் மாதச் சம்பளத்தை உரிய நேரத்தில் செலுத்த தவறியதாக அதன்மீது 107 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 30க்கும் அதிகமான ஊழியர்களுக்கு Warriors FC காற்பந்துக் குழு சம்பளம் வழங்கத் தவறியதாகக் கூறப்படுகிறது. அதில் விளையாட்டாளர்களும்  நிர்வாக உறுப்பினர்களும் அடங்குவர். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் சுமார் 358,000 வெள்ளி என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

ஒவ்வொருவருக்கும் 300 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரையிலான சம்பள பாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 15,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.


Top