Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தண்ணீர்ப் பயன்பாட்டை அளக்கும் கருவி எப்படிச் செயல்படுகிறது?

குளிக்கும்போது தண்ணீர் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதா? குழாய்களில் தண்ணீர்க் கசிவு ஏற்படுகிறதா?

வாசிப்புநேரம் -
தண்ணீர்ப் பயன்பாட்டை அளக்கும் கருவி எப்படிச் செயல்படுகிறது?

படம்: AFP/Anne-Christine Poujoulat

குளிக்கும்போது தண்ணீர் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதா? குழாய்களில் தண்ணீர்க் கசிவு ஏற்படுகிறதா?

இதையெல்லாம் பயனீட்டாளர்கள் உடனுக்குடன் இணையம்வழி தெரிந்துகொள்வதற்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் வகைசெய்யவுள்ளது.

ஓர் அறிவார்ந்த தண்ணீர்மானி (Smart Water Meter) பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ஆகியவற்றை ஆராயும்.

இதுபோன்ற 300,000 தண்ணீர்மானிகள் 90 விழுக்காடு, குடியிருப்பு, வர்த்தக வட்டாரங்களில் 2023-ஆம் ஆண்டுக்குள் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தண்ணீர்மானிகள் எவ்வாறு செயல்படும்?

- ஒவ்வொரு வீட்டிற்கு வெளியே நிறுவப்படும் தண்ணீர்மானி, தண்ணீர்ப் பயன்பாட்டைப் பதிவுசெய்யும்.
- தகவல் ஒரு செயலிக்கு அனுப்பப்படும்.
- பயனீட்டாளர்கள், அச்செயலிவழி தனிப்பட்ட தகவலைப் பெறலாம்.
- வீட்டின் தண்ணீர்ப் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினாலும் ஒரு குழாயில் தண்ணீர்க் கசிவு ஏற்பட்டாலும் செயலிக்கு அறிவிப்பு வரும்படி அமைத்துக் கொள்ளலாம்.
- அன்றாடப் பயன்பாட்டை மக்கள் கவனித்து வரலாம்.

இதன்வழி பயனீட்டாளர்களைத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வைப்பது கழகத்தின் நோக்கம்.

அத்துடன் சிங்கப்பூரின் தண்ணீர்ச் செயல்முறையை மின்னிலக்கமயமாக மாற்றுவதில் அறிவார்ந்த தண்ணீர்மானிகள் பங்களிக்கும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்