Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தண்ணீர்க்குழாயைச் சேதப்படுத்திய கட்டுமான நிறுவனத்துக்கு $44,000 அபராதம்

முதல்முறை குற்றம்புரிந்ததால், நிறுவனத்துக்கு 42,000 வெள்ளி அபராதமும் கழகத்திடம் முறையான அனுமதி பெறத் தவறியதால் மேலும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
தண்ணீர்க்குழாயைச் சேதப்படுத்திய கட்டுமான நிறுவனத்துக்கு $44,000 அபராதம்

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

தம்பனீஸ் அவென்யூ 5இல் உள்ள கட்டுமானத் தளத்தில் தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்தியதால் தண்ணீர் வீணாகியதற்கு கட்டுமான நிறுவனத்துக்கு 44,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் நீச்சல் குளத்தைப் போன்ற ஒன்றரைக் குளங்களை நிரப்பக்கூடிய அளவு நீர் வீணானதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

Hexacon கட்டுமான நிறுவனம் CCECC Singapore என்ற நிறுவனத்தின் சேவையை நாடியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி தம்பனீஸில் மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணிகளின்போது சம்பவம் நடந்தது.

கட்டுமானப் பணியிடத்தில் நீர்க்குழாய்களின் தொடர்பில் வேலைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை CCECC Singapore நிறுவனம் முன்கூட்டியே பெறவில்லை.

(படம்:Matin Akmal)

தம்பனீஸ் பேருந்து முனையம், ஈஸ்ட்லிங்க் உணவுக் கடை, தம்பனீஸ் பிளாஸா, மத்திய சேமநிதிக் கிளை போன்றவற்றில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.

முதல்முறை குற்றம்புரிந்ததால், நிறுவனத்துக்கு 42,000 வெள்ளி அபராதமும் கழகத்திடம் முறையான அனுமதி பெறத் தவறியதால் மேலும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்