Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: போக்குவரத்து அமைச்சர்

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது  பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தமது Facebook பதிவில் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: போக்குவரத்து அமைச்சர்

படம்: AFP/Catherine Lai

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தமது Facebook பதிவில் தெரிவித்துள்ளார்.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் முடிவுக்கு வந்த பின்னர்,
பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் வழக்கநிலைக்குத் திரும்பும்.

அப்போது கிருமிப் பரவல் ஏற்படாமல் இருக்க முகக் கவசம் அணிவது அவசியம் என்பதைத் திரு.காவ் சுட்டினார்.

தற்போது நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ளது. பொதுப் போக்குவரத்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்ய முடிகிறது. ஆனால் இதற்குப் பிந்திய காலத்தில் கூட்டம் திரும்பும்போது பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்வது கடினமாக இருக்கும். நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பர். அது பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவேதான் முகக் கவசம் அணிவது அவசியம்  

என்றார் திரு.காவ்.

பயணிகளை அதற்கு ஆயத்தப்படுத்தும் வகையில் இப்போதே அவர்களை முகக் கவசம் அணிந்துகொள்ள ஊக்குவிப்பதாக அவர் சொன்னார்.

போக்குவரத்துத் தூதர்கள், பயணிகளுக்கு முகக் கவசத்தை அணிந்து கொள்ள நினைவூட்டுவர்.

மறுபடியும் பயன்படுத்தக் கூடிய இலவச முகக் கவசங்களை இதுவரை பெற்றுக்கொள்ளாதோர் நாளைக்குள் அதைப் பெற்றுக்கொள்ளும்படியும் திரு. காவ் கேட்டுக்கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்