Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓய்ந்தது மழை...குடை தேவையில்லை... அடுத்த இரு வாரங்களுக்குச் சூடான வானிலை...

சிங்கப்பூரில் இந்த மாதம் முழுவதும், வட கிழக்குப் பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஓய்ந்தது மழை...குடை தேவையில்லை... அடுத்த இரு வாரங்களுக்குச் சூடான வானிலை...

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் இந்த மாதம் முழுவதும், வட கிழக்குப் பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

வடகிழக்கு அல்லது வட மேற்குத் திசையிலிருந்து குறைந்த வேகத்தில் காற்று வீசும்.

இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலான மழை பெய்தது.

அடுத்த இரண்டு வாரங்கள் வறட்சியாகவும், சூடாகவும் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாள்களில் அன்றாட வெப்பம் அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

சில நாள்களில் அது 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு, சில நேரம் பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இந்த மாதத்தின் பிற்பாதியில், மழை அளவு வழக்கத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

ஆனால், இந்த மாதம் முழுமைக்குமான மழைஅளவு வழக்கத்தை விடக் கூடுதலாக இருக்கும்.

இந்த மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் மிதமிஞ்சிப் பெய்த பருவமழை அதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்