Images
  • Rainy Weather
    (படம்: AFP/Roslan Rahman) 

இந்த மாதத்தின் பிற்பாதியிலும் மழையை எதிர்பார்க்கலாம் : வானிலை ஆய்வகம்

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் பிற்பாதியிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அதே வேளையில் சூடான பருவநிலையும் தொடரும் என்றும் வானிலை ஆய்வகம் தெரிவித்திருக்கிறது.

ஆறிலிருந்து எட்டு நாட்கள் வரை முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் மிதமான அளவிலிருந்து கனமான அளவு வரை குறுகிய நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று அது குறிப்பிட்டது.

அத்துடன் ஓரிரு நாளில் காலை நேரத்தில் இடியுடன் கூடிய பரவலான மழையையும் வேகமான காற்றையும் எதிர்பார்க்கலாம்.

அதே வேளையில் பெரும்பாலான நாட்களில் வெப்பமான பருவநிலையும் நீடிக்கும்.

பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்.

ஒருசில நாட்களில் பிற்பகல் நேரத்தில் அன்றாட உச்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்தது.


 

Top