Images
  • weather
    ( படம்: AFP )

இம்மாதப் பிற்பாதியில் மேலும் வறண்ட வானிலை நிலவும்: வானிலை நிலையம்

இம்மாதம் இனிவரும் நாட்களில் சிலமுறை மட்டுமே மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மாதத்தின் முதல் பாதியில் பெய்த மழையை விட அது குறைவாக இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை நிலையம் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களில் நண்பகல் அல்லது பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் நிலையம் தெரிவித்தது.

தினமும் வெப்பநிலை 25 டிகிரி செல்சியசிக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் அது தெரிவித்தது. 

Top