Images
  • Weather
    (படம்: Gaya Chandramohan/ CNA)

அடுத்த இரு வாரங்களுக்கு வெப்பம், ஈரப்பதம்: வானிலை ஆய்வகம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் வெப்பமும் ஈரப்பதமும் அடுத்த இரு வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஆறிலிருந்து எட்டு நாட்களுக்குக் காலை வேளையின் பிற்பகுதியிலும் மதிய வேளையின் முற்பகுதியிலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

குறைந்த அளவு அல்லது முற்றிலும் மழை இல்லாத நாட்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

Sumatra squalls எனும் பலத்த காற்றால் அடுத்த வாரம் இரண்டிலிருந்து மூன்று நாள்கள் பலத்த காற்றும் இடியுடன் கூடிய மழையும் அதிகாலை, காலை வேளைகளில் எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழையை எதிர்பார்க்கலாம். 

Top