Images
  • sg covid (25)
    (படம்: Gaya Chandramohan)

50க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் திருமண நிகழ்வுகளில், அனைவருக்கும் கட்டாய COVID-19 முன் பரிசோதனை

சிங்கப்பூரில் சமூக அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சமய நிகழ்ச்சிகள்

--100 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டால், Pre-Event Testing (PET) என்கின்ற COVID-19 முன் பரிசோதனை கட்டாயமாக்கப்படும்.

-- 250 பேர் வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

--நேரடி இசை, தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

திருமணங்கள்

--50க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் திருமண நிகழ்வுகளில், கலந்துகொள்ளும் அனைவரும் COVID-19 முன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

--250 பேர் வரை, 50 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம்.

ஈமச்சடங்கு

--அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் நாளன்று, 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.

--இறுதிச் சடங்கின் மற்ற நாள்களில், ஒரு நேரத்தில் 30 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி.

விளையாட்டு நிகழ்ச்சிகள்

- அனைத்து பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

- பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

நேரடி நிகழ்ச்சிகள்

--அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 750லிருந்து 250ஆகக் குறைக்கப்படும்.

--50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டால், அனைவரும் COVID-19 முன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

--திரையரங்குகளில் 100 பேர் வரை மட்டுமே அனுமதி.

நூலகங்கள், அருங்காட்சியங்கள்

--அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 விழுக்காடாகக் குறைக்கப்படும்.

சுற்றுப் பயணம்

--சுற்றுப் பயணங்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50லிருந்து 20க்குக் குறைக்கப்படுகிறது.

Top