Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

யாரை விடுவது? யாரை அழைப்பது? குழப்பத்தில் மணமக்கள்

சிங்கப்பூரில் கோவிட்-19 சம்பவங்கள் சமூக அளவில் மீண்டும் அதிகமானதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கோவிட்-19 சம்பவங்கள் சமூக அளவில் மீண்டும் அதிகமானதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

திருமணத்துக்கு அழைக்கும் விருந்தினரின் எண்ணிக்கை, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவை அதில் அடங்கும்.

100க்கும் மேற்பட்டோரைத் திருமணத்துக்கு அழைத்தால், கிருமித்தொற்றுப் பரிசோதனையைச் செய்தாக வேண்டும்.

அதனை மனத்தில் கொண்டு 62 பேருக்கு மட்டும் அழைப்பிதழைக் கொடுத்திருந்தார் குமாரி குலோடியா மாரியேன் பெனடிக்ட் (Claudia Marianne Benedict)

எனினும் 100 என்ற எண்ணிக்கை 50 எனக் குறைக்கப்பட்டது.

25 வயது மணப்பெண்ணுக்கு இக்கட்டான சூழ்நிலை.
12 பேரை மீண்டும் அழைத்து நிலைமையை விளக்கி,கல்யாணத்துக்கு வரவேண்டாம் என்று கூறவேண்டும்.

இந்த மாதம் 15ஆம் தேதி அவருக்குத் திருமணம்.

வெட்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. 12 பேரைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினேன். கோவிட் பரிசோதனையை அனைவரும் எடுப்பதற்குப் பதிலாக இதுவே சுலபமான வழியாகப்பட்டது.

- குமாரி பெனடிக்ட்

ஒவ்வொரு பரிசோதனைக்கும் கட்டணம்: $50.

இந்தக் கட்டணம் திருமண ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு இடையில் மாறுபடுகிறது.

குமாரி பெனடிக்ட்டைப் போலப் பலரும் திருமணத்தில் கடைசிநேர மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்ததாக TODAYஇடம் கூறினர்.

குறிப்பாக விருந்தினரின் பட்டியல்.

சிலர் பெரியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாகக் கூறினர்.

சிலர் யாரையும் விட்டுவிட முடியாத நிலையில் கோவிட் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துவருகின்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்