Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிப்புற நிகழ்ச்சிகள், திருமணங்கள், சமய நிகழ்ச்சிகள், ஈமச்சடங்கு, திரையரங்குகள் - தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்

ஜூன் 14ஆம் தேதி முதல் சில சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50-க்கு அதிகரிக்கலாம்.

வாசிப்புநேரம் -
வெளிப்புற நிகழ்ச்சிகள், திருமணங்கள், சமய நிகழ்ச்சிகள், ஈமச்சடங்கு, திரையரங்குகள் - தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்

(படம்:Jeremy Wong Weddings/Unsplash)

சிங்கப்பூரில் சமூக அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கட்டுக்குள் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவிருக்கின்றன.

அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு இன்று அதனை அறிவித்தது.

ஜூன் 14, ஜூன் 21 என இரண்டு கட்டங்களாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

சமய நிகழ்ச்சிகள்:

ஜூன் 14ஆம் தேதி முதல் :

--50 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் Pre-Event Testing (PET) என்கின்ற COVID-19 முன் பரிசோதனை கட்டாயம்.

-- 250 பேர் வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

-- நிலைமை மேம்பட்டால் ஜூன் 21 முதல் முகக்கவசம் அகற்றலாம்; பாடலாம்; காற்றிசைக் கருவிகளை இசைக்கலாம்.


திருமணங்கள்:

ஜூன் 14ஆம் தேதி முதல் :

50க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் திருமண நிகழ்வுகளில் COVID-19 முன் பரிசோதனை (PET) செய்துகொள்ளவேண்டும்.
250 பேர் வரை அனுமதி.

-- நிலைமை மேம்பட்டால் ஜூன் 21ஆம் தேதி முதல் திருமண விருந்து உபசரிப்பில் கலந்துகொள்ள 100 பேர் வரை அனுமதி. 50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் PET பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.


ஈமச்சடங்கு

ஜூன் 14ஆம் தேதி முதல் இப்போது உள்ளது போலவே ஒருநேரத்தில் 20 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி.

விளையாட்டு நிகழ்ச்சிகள்:

ஜூன் 14ஆம் தேதி முதல் :

-- விளையாட்டு நிகழ்ச்சிகளைக் காணப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

-- 250 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

--50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் PET பரிசோதனை அவசியம்.

-- நிலைமை மேம்பட்டால் ஜூன் 21ஆம் தேதி முதல் அனைத்துப் பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகள் மீண்டும் தொடரும்.

-- அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 250.

--50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் PET பரிசோதனை அவசியம்.


நேரடி நிகழ்ச்சிகள்:

ஜூன் 14ஆம் தேதி முதல் :

--அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 250 பேர்

--50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் PET பரிசோதனை அவசியம்.

-- நிலைமை மேம்பட்டால் ஜூன் 21ஆம் தேதி முதல் முகக்கவசம் அகற்றலாம்; பாடலாம்; காற்றிசைக் கருவிகளை இசைக்கலாம்


திரையரங்குகள் :

ஜூன் 14ஆம் தேதி முதல் :

--திரையரங்குகளில் 250 பேர் வரை மட்டுமே அனுமதி. PET பரிசோதனை செய்யவேண்டும்.

-- 50 பேர் வரை மட்டும் அனுமதி என்றால் COVID-19 முன் பரிசோதனை தேவையில்லை

-- நிலைமை மேம்பட்டால் ஜூன் 21ஆம் தேதி முதல் உணவு, பானம் விற்கலாம்


நூலகங்கள், அருங்காட்சியகங்கள் :

-- ஜூன் 14ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையை
50 விழுக்காட்டுக்கு உயர்த்தலாம்.


சுற்றுப்பயணம் :

-- ஜூன் 14ஆம் தேதி முதல் சில சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50-க்கு அதிகரிக்கலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்