Images
  • wedding ring
    படம்: AFP/Jay Directo

திருமணங்கள், இறுதிச் சடங்குகளில், வரும் செவ்வாய் முதல், கூடுதலானோர் கலந்துகொள்ள அனுமதி

சிங்கப்பூரில் COVID-19 நோய்ப் பரவலைக் கையாள்வதற்கான அமைச்சுகளுக்கிடையிலான பணிக்குழு, திருமணங்கள் இறுதிச்சடங்குகள் ஆகியவை தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியுள்ளது.

வரும் செவ்வாய்க் கிழமை (ஆகஸ்ட் 4) முதல், திருமணங்களில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம். மணமக்கள், திருமணத்தை நடத்திவைப்பவர் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர். வழிபாட்டுத் தலங்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பொது இடங்கள், இதர அரங்குகள் ஆகியவற்றில் நடக்கும் திருமணங்களுக்கும் அது பொருந்தும்.

வீடுகளிலோ, திருமணப் பதிவகம் போன்ற சிறிய இடங்களிலோ நடக்கும் திருமணங்களில் அதிகபட்சம் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம்.

வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்துக்கேற்ப அதிகபட்சம் 30 பேர் கலந்துகொள்ள அனுமதி உண்டு.

நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து கட்டுப்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்யவிருப்பதாகப் பணிக்குழு தெரிவித்தது.

Top