Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடல்எடையைக் குறைக்க உதவுவதாக இணையத்தில் விற்பனையாகும் பொருள் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை

உடல் எடையைக் குறைப்பதாகக் கூறப்படும் Queenz Mango Xsliim-இல் தடைசெய்யப்பட்ட பொருள்கள் உள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
உடல்எடையைக் குறைக்க உதவுவதாக இணையத்தில் விற்பனையாகும் பொருள் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை

(படம்: Health Sciences Authority)

உடல் எடையைக் குறைப்பதாகக் கூறப்படும் Queenz Mango Xsliim-இல் தடைசெய்யப்பட்ட பொருள்கள் உள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது.

அவற்றால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் ஆணையம் எச்சரித்தது.

Queenz Mango Xsliim Botanical Beverage Mix Mango Powder with Garcinia Cambogia & Aloe Vera Extract எனும் உடல் எடைக்குறைப்புப் பொருள் இணையத்தின் வழி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

sibu-tramine, sennoside ஆகிய தடைசெய்யப்பட்ட பொருள்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதனை உட்கொள்வோருக்கு வாய் உலர்தல், அதிவேகமான இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

எனவே அந்தப் பொருளை வாங்கவோ, உண்ணவோ வேண்டாம் என்று ஆணையம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

Carousell, Lazada, Shopee, Qoo10, Facebook போன்ற இணையத்தளங்களில் அந்த உடல்எடைக் குறைப்புப் பொருள் விற்கப்பட்டு வருகிறது.

தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்போருக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை, அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்