Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிரமங்கள் தாண்டி சிங்கப்பூர் வந்த ஒட்டகச்சிவிங்கிகள் - அவற்றைப் பற்றி....

இந்தியாவின் மைசூர் விலங்குத் தோட்டத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் கடல்வழி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

(நிருபர்: ஜமுனா)

இந்தியாவின் மைசூர் விலங்குத் தோட்டத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் கடல்வழி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் உள்ள , ஒரு வயது அடிலும் பாலாஜியும் மூன்று வாரங்களுக்கு முன் இங்கு வந்தன.

16 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு கடல்வழி விலங்குகள் சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

கப்பலில் நான்காவது மாடியில் தங்கியிருந்ததாகச் சொன்னார், சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் தலைமைப் பராமரிப்பாளர், ரா. பரமசிவம்.

அங்கிருந்து கீழே இறங்கி கப்பல் தளத்துக்கு வந்து ஒட்டகச்சிவிங்கிகளுக்குச் சாப்பாடு போட்டுவிட்டுச் செல்லவேண்டும். மிகவும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

என்றார் அவர்.

அவற்றுக்கு என்னென்ன தின்பண்டங்கள் எல்லாம் கொடுக்கிறார்கள்? எப்படி அவற்றை இங்குக் கொண்டுவந்து மாற்றுவது என்று அங்குள்ள ஊட்டச்சத்து நிபுணரிடம் பேசி இங்குள்ள ஊட்டச்சத்து நிபுணரைத் தொடர்புகொண்டு அதற்கான ஆயத்தம் எல்லாம் செய்து சாப்பாடு எல்லாம் தயாராக இருக்கச்செய்தோம்.

என்றார் திரு பரமசிவம்.

இப்படி ஏராளமான சிரமங்களைச் சந்தித்தபின், ஒட்டகச்சிவிங்கிகள் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளன.

அருகிவரும் Rothschild வகை ஒட்டகச்-சிவிங்கிகளைப் பாதுகாக்கவேண்டும்...
அவற்றின் முக்கியத்துவத்துவத்தை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் நோக்கத்தில் அவை சிஙகப்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

அது பற்றிய சிறப்புத் தொகுப்பை இன்றிரவு எட்டரை மணித் தொலைக்காட்சி செய்தியில் பார்க்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்