Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Westlite Woodlands வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் 11 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில், Westlite Woodlands வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிக்கும் 11 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Westlite Woodlands வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் 11 பேருக்குக் கிருமித்தொற்று

(படம்: Google Maps)

சிங்கப்பூரில், Westlite Woodlands வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிக்கும் 11 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை மாதங்களில் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆக அதிக நோய்த்தொற்று எண்ணிக்கை அது.

Westlite Woodlands அங்கு தங்கியிருக்கும் ஊழியர்களின் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக CNA தெரிவித்தது.

இம்மாதம் 19ஆம் தேதி கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு ஊழியர், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 568 கிருமித்தொற்றுப் பரிசோதனைகளில் இந்த ஊழியர்களுக்கும் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் என்று அந்தக் கடிதம் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மருத்துவமனைக்கு அல்லது சமூகப் பராமரிப்பு வசதிக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு வசிக்கும் 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்