Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Westlite Woodlands தங்கும் விடுதியில் கிருமித்தொற்று - பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன : சுகாதார அமைச்சு

Westlite Woodlands ஊழியர் விடுதியில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

Westlite Woodlands ஊழியர் விடுதியில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிருமிப்பரவலைத் தடுப்பதற்கு:

- பாதிக்கப்பட்ட புளோக்குகளில் வசிக்கும் ஊழியர்களுக்குத் தனிமைப்படுத்தும் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது

- விடுதியில் தங்கும் அனைவருக்கும் சிறப்புக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

- பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் வரை, விடுதிக்குள் நுழையவோ அதைவிட்டு வெளியேறவோ அனுமதி இல்லை

- கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த ஊழியர்களுக்கு வழக்கமான பரிசோதனையிலிருந்து விலக்கு இல்லை

விடுதியில், திங்கட்கிழமை அன்று, 35 வயது பங்களாதேஷ் ஊழியருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவருக்கு, தென்னாப்பிரிக்காவில் தோன்றிய B1351 வகை கொரோனா கிருமி தொற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

அவர் கடல்துறையில் பணிபுரிந்ததாகவும், சிங்கப்பூரில் அணையும் மற்ற கப்பல்களில் இருந்து, அவருக்கு அந்தக் கிருமி தொற்றியிருக்கலாம் என்று சுகாதார அமைச்சு சொன்னது.

ஊழியருக்கு ஏற்கெனவே தடுப்பூசி 2 முறை போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று, விடுதியில், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த ஊழியர்கள் மேலும் 17 பேருக்கு மீண்டும் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்