Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மழையின் காரணமாக, சாலைகளில் மேலும் அதிகமான குழிகள்; கடந்த ஆண்டின் மாதாந்தரச் சராசரியுடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் இரட்டிப்புச் சம்பவங்கள் : LTA

சிங்கப்பூர் சாலைகளில் மேலும் அதிகமான குழிகள் தோன்றியுள்ளன என்றும், கடந்த ஆண்டின் மாதாந்தரச் சராசரியுடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் இரட்டிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மழையின் காரணமாக, சாலைகளில் மேலும் அதிகமான குழிகள்; கடந்த ஆண்டின் மாதாந்தரச் சராசரியுடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் இரட்டிப்புச் சம்பவங்கள் : LTA

(படம்: Facebook/Zuraida Abdul Rahman Gulam)

சிங்கப்பூர் சாலைகளில் மேலும் அதிகமான குழிகள் தோன்றியுள்ளன என்றும், கடந்த ஆண்டின் மாதாந்தரச் சராசரியுடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் இரட்டிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக அவ்வாறு நேர்ந்துள்ளது.

பொதுவாக அதிகப் பயன்பாடு காரணமாக சாலைகளில் விரிசல்கள் ஏற்படுவதுண்டு.

இருப்பினும், மழையின் காரணமாக கூடுதலான தண்ணீர் உள்ளே செல்வதால் அவை விரிவடைவதாக ஆணையம் CNA-யிடம் கூறியது.

விரிசல்கள் பின்னர் குழிகளாக மாறிவிடுகின்றன.

சாலைகளில் தென்படும் குழிகள் குறித்து வாகனமோட்டிகள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அது குறித்த புகார்களும் ஆணையத்திடம் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அனைத்துச் சாலைக் குறைபாடுகளும் பொதுவாக விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அதன் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவது குறித்து குத்தகையாளர்களுடன் பேசி வருவதாகவும் ஆணையம் கூறியது.

இந்நிலையில், வாகனமோட்டிகளை மழையில் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளும்படி அது கேட்டுக்கொண்டது.

குழிகள் முதலில் தற்காலிகமாக மூடப்படும் என்றும் மழைக்காலத்திற்குப் பிறகு மேலும் நிரந்தரமான தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.

சாலைகளில் குழிகளைப் பார்க்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி அது கேட்டுக்கொண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்