Images
  • Whampoa Clementi mkt
    படம்: Google Street View/Try Sutrisno Foo

மேலும் இரு ஈரச்சந்தைகள் மூடப்படும்... மேல் விவரங்கள்

கிளமெண்டி (Clementi) புளோக் 448 ஈரச்சந்தை, உணவு நிலையமும், வாம்ப்போ டிரைவ் (Whampoa Drive) ஈரச்சந்தையும் இன்றிலிருந்து 2 வாரங்களுக்கு மூடப்படும்.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்றுக் குழுமங்களாக அந்தச் சந்தைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கிளமெண்டி புளோக் 448 ஈரச்சந்தை, உணவு நிலையத்தில் வேலை செய்யும், அல்லது அங்கு சென்ற, 22 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இம்மாதம் 7ஆம் தேதி முதல் நேற்று வரை அங்கு சென்று வந்தோருக்கு இலவசக் கிருமித்தொற்றுப் பரிசோதனை வழங்கப்படும்.

வாம்ப்போ டிரைவ் ஈரச்சந்தையுடன் தொடர்புடைய 12 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அந்த இரண்டு சந்தைகளும் இன்றுமுதல் அடுத்த மாதம் 5ஆம் தேதிவரை, சுத்திகரிப்புப் பணிகளுக்காக மூடப்படும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Top